கார் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்.. தரமான Must-Watch கான்செப்ட்.. செம்ம திரில் ட்ரைலர் வீடியோ

Driver jamuna trailer video getting viral on social media

தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பின்னர், கலைஞர் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோ ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

Driver jamuna trailer video getting viral on social media

இதனைத் தொடர்ந்து, சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்த இவர், நீதானா அவன் என்னும் தமிழ் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பெரிய வரவேற்பு பெறாத நிலையில், விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Driver jamuna trailer video getting viral on social media

கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பல திரைப்படங்களில் நடித்தார். இவருக்கு பெரிய மைல்கல் ஆக அமைந்த திரைப்படங்கள்: கனா மற்றும் காக்க முட்டை. தனக்கான bold கதாபாத்திரங்கள் கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றார். இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

Driver jamuna trailer video getting viral on social media

கடந்த மாதம், இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் புதிய படமான டிரைவர் ஜமுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது செம த்ரில்லிங்கான ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஒரு பெண் கார் டிரைவராக வேலை பார்த்தால் வரும் இன்னல்கள் பற்றிய படமாக உள்ளது. இந்த படத்தை வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குனர் கிங்க்ஸ்லின் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Driver jamuna trailer video getting viral on social media

படம் முழுவதும் சாலையில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் டிரைவரின் ஒரு நாள் பயணத்தை குறிக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

Share this post