Netflixல் பார்த்து Don படத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்ஸ்.

Don memes trending on social media after netflix release

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Don memes trending on social media after netflix release

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Don memes trending on social media after netflix release

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

Don memes trending on social media after netflix release

தற்போது, இவர் நடிப்பில், SK20 திரைப்படத்தின் பெயர் Prince என பர்ஸ்ட் மற்றும் 2வது லுக் வெளியிடப்பட்டுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Don memes trending on social media after netflix release

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான்.

Don memes trending on social media after netflix release

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Don memes trending on social media after netflix release

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

Don memes trending on social media after netflix release

வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகெங்கும் திரையரங்குகள் மூலமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்போதும் சில திரையரங்குகளில் ’டான்’ திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Don memes trending on social media after netflix release

டான் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட், 25வது நாளை முன்னிட்டு வெற்றிவிழா அனைத்தும் நடைபெற்றது. இந்நிலையில், டான் திரைப்படம் Netflix’ல் ஸ்ட்ரீம் ஆவதை அறிவித்திருந்தனர்.

Don memes trending on social media after netflix release

திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்ல விமர்சனத்தை கூறி இருந்தனர். இந்நிலையில், தற்போது, OTT ரிலீஸ் பிறகு, டான் படத்தை கிண்டல் கேலி செய்து நெட்டிசன்கள் போட்டு வரும் மீம்ஸ் தற்போது நெட்டிசன்கள் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Don memes trending on social media after netflix release

சென்டிமென்ட் காட்சிகளையும், படத்தில் ரொம்பவும் கண்டிப்பான தந்தை வளர்ப்பினை கூறியதையும் பற்றி மீம்ஸ்களாகவும், கமெண்ட்களாகவும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Don memes trending on social media after netflix release

Share this post