டான் படத்தில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய காட்சிகள்.. முதல்முறையாக வெளியான சீன்கள் !

Don deleted scenes photos and video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Don deleted scenes photos and video getting viral on social media

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து, 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Don deleted scenes photos and video getting viral on social media

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டிய நடிகர் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Don deleted scenes photos and video getting viral on social media

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பிளாக்பஸ்டராக மாறியுள்ள இப்படம் சிவகார்த்திகேயனுக்கு மைல்கல்லாக மாறியது.

Don deleted scenes photos and video getting viral on social media

உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சொதப்பி வந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று தமிழகத்தில் வசூலை குவித்தது.

Don deleted scenes photos and video getting viral on social media

இந்நிலையில், டான் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய காட்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பாலா, விஜய் உள்ளிட்டோர் viva sessionல் கலந்து கொள்ளவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ஆனால் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டு இருக்கலாம் என ரசிகர்கள், மேலும் அந்த காட்சியின் BTS புகைப்படங்களை தற்போது நடிகர் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Share this post