இந்த சீன் படத்துல விட மேக்கிங் செம ரவுசா இருக்கு.. விழுந்து விழுந்து சிரித்த டான் படக்குழு.. Viral Video

Don comedy scene making video getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் சாதாரணமாக தொகுப்பாளராக பணியாற்றி தனது நகைச்சுவை பேச்சுகளால் மக்கள் மனதில் நின்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் செம பேமஸ் ஆன இவர், பல பிரபல நிகழ்ச்சிகளையும், விருது வழங்கும் விழாக்களிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

Don comedy scene making video getting viral on social media

இதன் நடுவே, ஒரு சில குறும்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 3 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Don comedy scene making video getting viral on social media

அதன் பின்னர், மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும், எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, டாக்டர் என தொடர் வெற்றிப்படங்களில் நடித்தார்.

தற்போது, இவர் நடிப்பில் டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அயலான் திரைப்படம் நிலுவையில் உள்ளது. நடிகர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

Don comedy scene making video getting viral on social media

மிக குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்து பெரும் அந்தஸ்தை எட்டியுள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் படியான திரைப்படங்களை தற்போது வரை தந்து வருகிறார்.

Don comedy scene making video getting viral on social media

இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள படம் டான். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சிவாங்கி, பாலசரவணன், ஆர் ஜே விஜய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Don comedy scene making video getting viral on social media

அப்பா சென்டிமென்ட், காலேஜ் கலாட்டா, SKவின் காமெடி, காதல் என அனைத்தையும் அருமையாக டெலிவெரி செய்துள்ளார் இயக்குனர் சிபி. பக்கா பாசிட்டிவ் ரிவியூ பெற்று வரும் டான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Don comedy scene making video getting viral on social media

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் SK20. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படத்தின் இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சத்யராஜ், ரித்து வர்மா, உக்ரைன் மாடல் அழகி மரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். SK20 படத்தின் பெயர் பிரின்ஸ் என பர்ஸ்ட் லுக்குடன் படக்குழு அறிவிப்பு வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. சிவகார்த்திகேயன் படத்தின் ஒரு நடிகையான உக்ரைன் மாடல் மரியாவுடன் இருக்கும் 2வது லுக்கும் வெளியானது.

Don comedy scene making video getting viral on social media

இந்நிலையில், டான் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். இப்படத்தில் நகைச்சுவை, அப்பா - மகன் எமோஷனல் காட்சிகள் என அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்தது. படம் ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது.

Don comedy scene making video getting viral on social media

இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், சில சீன்களில் தான் கண்கலங்கியதாக தெரிவித்து இருந்தார். சிவகார்த்திகேயனை நேரில் அழைத்தும் பாராட்டி இருந்தார். பல பிரபலங்களும் இப்படத்தை பாராட்டி வாழ்த்து கூறியிருந்தனர்.

Don comedy scene making video getting viral on social media

டான் படத்திலேயே மிக முக்கியமான காமெடி சீன் என இன்னும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் சீன். சிவகார்த்திகேயன் தனது தந்தை என பொய்யாக சூரியை கல்லூரிக்கு அழைத்து செல்வார். அப்போது, சூரியும் சிவகார்த்திகேயனும் கொரியன் ஸ்டைலில் ராகம் போட்டுக்கொண்ட பேசுவார்கள். அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்கவைத்த இதன் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Don comedy scene making video getting viral on social media

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நடிகர் சூரிக்கு இந்த டையலாக்கை எப்படி பேசுவது என்று சொல்லித்தருகிறார். சிவகார்த்திகேயனும், சூரியும் இந்த வசனத்தை பேச டான் படக்குழுவினர் விழுந்து விழுந்து சிரித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Share this post