ரச்சிதாவை மறைமுகமாக propose செய்த ராபர்ட்! எல்லைமீறுகிறாரா மாஸ்டர்? வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ராபர்ட். நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகிறார். சில டாஸ்குகளில் இவர் வெற்றியும் பெற்று இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனின் அமைதியான போட்டியாளர் என்றால் ராபர்ட் மாஸ்டர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக இவர் காதல் லீலைகள் செய்வதாக சில வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏற்கனவே, ஒரு டாஸ்கில் ராபர்ட் மாஸ்டர் – ரக்ஷிதா இருவரும் எதிர் எதிரே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த டாஸ்க்கை வைத்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வந்தனர். பின்னர், ரக்சிதா பேசிக்கொண்டிருக்கும் போது அவரை ராபர்ட் மாஸ்டர் பார்க்கும் பார்வை குறித்த வீடியோவை நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தனர். அவர்கள் இருவருமே கடந்த நான்கு வாரங்களாக ஒரே டீமில் தான் இருந்து வருகின்றனர். ரச்சிதா எந்த டீமில் இருக்கிறாரோ அதே டீமில் தான் மாஸ்டரும் இருப்பார்.
கமல் எபிசோடில் போட்டியாளர்களுக்கு பேட்டி எடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை அழைத்து பேட்டி எடுத்தார். “ராபர்ட் மாஸ்டர் பற்றி என்ன நினைக்கிறீங்க, அவர் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல வாரார்.. உங்களுக்கு புரியுதா” என அவர் கமல் முன்னிலையிலேயே மறைமுகமாக ப்ரொபோஸ் செய்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
ஒருத்திக்கு வெளில புருஷன் இருக்கான்.
— Ga Vigneshwaran (@ga_vigneshwaran) November 6, 2022
ஒருத்தனுக்கு வெளில GF இருக்கு.
என்ன எளவுடா இது.
ராபர்ட் என்னதான் பாகுறார்ன்னு எனக்கு தெரியும். #Rachitha சூப்பர் . #Robert#Rachitha#BiggBossTamil6#BiggBossTamil pic.twitter.com/wZyltjH46q