ராக்கெட்ரி படத்தால் வீட்டை இழந்த மாதவன்? மாதவனின் பதிவு வைரல் !
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் ராக்கெட்ரி. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன், மாதவனுக்கு சிம்ரன் ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல், ஒரு ப்யூர் பயோபிக்கை கொடுத்தே ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறனர் படக்குழு.
இப்படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனாகவே வாழ்ந்து இருப்பதாக பலரும் பாராட்டினர். அதுமட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரன், ஜெகன் முதல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா, ஷாருக்கான் வரை அனைவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சமீபத்தில் வெளியாகி மக்கள் மனதை பெரிதும் பாதித்ததாக அமைந்த திரைப்படம் ராக்கெட்ரி. நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை பற்றி படமாக்கப்பட்ட அத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர். நடிகர் ரஜினி கூட அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த சீனை வைத்து கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் உலாவ தொடங்கி உள்ளது. நம்பி நாராயணன், சட்ட ரீதியாக போராடி, தனது மீது சுமத்தப்பட்ட தேச துரோகி என்னும் பட்டம் முதல் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம், ராக்கெட்ரி.
இந்நிலையில், தற்போது, படத்திற்காக மாதவன் தனது வீட்டை இழந்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது குறித்த ரசிகர் ஒருவர் தனது பதிவில் ராக்கெட்டுக்கு நிதி அளிக்க மாதவன் தனது வீட்டை இழந்ததாக கூறியதோடு, அசல் இயக்குனர் விலகிய போது படத்தை மாதவன் இயக்கியதாகவும் கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள மாதவன், தனது வீட்டை இழக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து எழுதிய அவர், தயவு செய்து என் தியாகத்தை அதிகமாக ஆதரிக்காதீர்கள். நான் எனது வீடு உட்பட எதையும் இழக்கவில்லை. இதில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். கடவுளின் அருளால் நாங்கள் அனைவரும் மிகவும் நல்ல மற்றும் பெருமையான லாபம் பெற்றுள்ளோம். நான் இன்னும் என் வீட்டில் தான் வாழ்கிறேன் என எழுதியுள்ளார்.
Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022