வாரிசு Audio Launch'ல் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பியா? வீடியோ ஆதாரத்துடன் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர், பீஸ்ட் இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.
தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய். இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் இருந்து ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘அம்மா பாடல்’என 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சென்னை நேரு அரங்கில் மிகப்பிரமாண்டமாக நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். வழக்கம் போல விஜய் மிகவும் எளிமையாக அதே சமயத்தில் ஸ்டைலாக விழாவிற்கு வருகை தந்தார்.
பொதுவாகவே, விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் ஆடியோ லான்ச் என்றாலே குட்டி ஸ்டோரி ரொம்ப பேமஸ். தனக்கு எதிரான விமர்சனங்கள், எதிர்ப்புகள் என எதாவது குறித்து பேசுவார். இதனால், இந்த விழாவில் விஜய் என்ன பேசுவார் என மக்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் வாரிசு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி காப்பி என சில ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
‘எனக்கு போட்டியாளர் நான் தான்’ என விஜய் குட்டி ஸ்டோரி சொல்லியிருந்தார். இதே கருத்தை பல வருடங்களுக்கு முன்பு ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருக்கின்றார். இதை வைத்து ரசிகர்கள் பலர் விஜய் ரஜினியை காப்பி அடித்துவிட்டார் என கூறி வருகின்றனர். எனக்கு வேறு யாரும் போட்டி இல்லை, எனக்கு நானே தான் போட்டி என ரஜினி சொல்லிய அதே கருத்தை தற்போது விஜய்யும் கூறியுள்ளதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Pudhusa yosi da silra. https://t.co/ppiGO1fQkO pic.twitter.com/pep9Q28Cos
— Thalaivarism (@HARISH151192) December 24, 2022