துணிவு 3வது சிங்கிள் ‘Gangstaa’ பாடலில் இந்த வரிகள் 'TheeThalapathy' பாடலுக்கு பதிலடியா ? இந்த வரிய நோட் பண்ணுங்க.
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் 24ம் தேதி வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று துணிவு படத்தின் முன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. அதில் இடம்பெற்று இருக்கும் சில வரிகள் விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளது போல தெரிவதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதில் குறிப்பாக வாரிசு படத்தின் தீ தளபதி பாடலில் இடம்பெற்ற ‘இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமா’ என்ற வரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பாடலில் ‘வா பதிலடிதான் தெரியுமடா, உனக்கு சம்பவம் இருக்கு ‘ என்ற வரிகள் அமைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.