தனுஷ் பட இயக்குனரை ரகசிய திருமணம் செய்த தன்யா? பிரபலம் வெளியிட்ட தகவல்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. இதனைத் தொடர்ந்து, காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்து நல்ல அங்கீகாரம் பெற்றார்.
தமிழ் மொழியை விட பல தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கில் நாயகியாகவே நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்க அங்கு படங்கள் நிறைய நடித்து வருகிறார். ஆனால் கொரோனாவிற்கு பிறகு தன்யாவை படங்கள் பக்கம் காண முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் தெலுங்கு சினிமா நடிகை கல்பிகா தனது யூடியூப் பக்கத்தில், நடிகை தன்யாவிற்கு இந்த வருடம் ஜனவரி மாதம் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகனுடன் ரகசிய திருமணம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள செய்தி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி மோகன், தமிழ் மொழியில், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி 1 & 2 உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது