Live'ல் நயனை அசிங்கப்படுத்திய பிருந்தா மாஸ்டர்? சிரித்து சமாளித்த நயன்.. வைரலாகும் வீடியோ!
கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார். கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.
கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார். இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் ஏற்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தனர்.
மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு வாடகைதாய் முறையில் 2 மகன்களும் உள்ளனர். தற்போது, நயன்தாரா, தளபதி விஜய் நடிப்பில் வெளியான வில்லு படத்தில் ப்ரோமோஷன் போது நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
பிரபுதேவா இயக்கத்தில் நயன்தாரா, விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வில்லு. 2009ம் ஆண்டு பொங்கல் அன்று ரிலீசான நிலையில், வில்லு படத்தின் ப்ரோமோஷன்காக நயன்தாரா, விஜய், பிரபுதேவா உள்ளிட்ட அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, ரசிகர்களிடம் போன் மூலம் பேசினார்கள்.
பலரும் நயன்தாரா மற்றும் விஜய் அவர்களுடன் நடிப்பினை பற்றியும் வில்லு படத்தினை பற்றியும் பேசிருந்தார்கள். அப்போது, நடன இயக்குனரான கலா மாஸ்டரும், பிருந்தா மாஸ்டரும் தொடர்பு கொண்டு விஜய்யும் வில்லு படத்தையும் நயன்தாராவையும் புகழ்ந்து தள்ளினார். பிருந்தா மாஸ்டர் பேசும்போது, நயன்தாரா ஏன் இவ்வளவு சைலன்டா இருக்க என கேட்கிறார்.
அதற்கு நயன் திடீரென சிரிக்கிறார் மேலும் அதற்கு நான் எப்பொழுதும் இப்படிதான் உங்களுக்கு தெரியாதா? என கூறுகிறார். உடனே அதற்கு பதில் அளித்த பிருந்தா மாஸ்டர் நயன்தாரா ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி இருக்க உன்னுடைய நிஜ முகத்தை காட்டு என கலாய்த்து தள்ளுகிறார். பிறகு இதற்கு நயன்தாரா என்னுடைய மனதை வாங்காதீங்க என சொல்ல மானமா அப்படின்னா என்ன என பிருந்தா மாஸ்டர் நயன்தாராவை அவமானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
பிறகு உடனே நயன்தாரா தயவுசெய்து இவங்களோட போனை கட் பண்ணுங்க என தொகுப்பாளரிடம் கூற உடனே பிருந்தா மாஸ்டர் நீ எப்பொழுதும் நல்ல பொண்ணு தான் என மாற்றி பேசுகிறார். நயன்தாரா சிரித்து பேசியிருந்தாலும் அவருடைய கண்ணில் பீதி தெரிகிறது என ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.