பாரதி கண்ணம்மா சீரியலை தாக்கி சீன் வைத்த பாக்கியலட்சுமி இயக்குனர் ? வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும், சீரியல் தொடர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறி வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் செம ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர், ஒரு குடும்ப தலைவியின் கதையை எடுத்துரைக்கும் இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. டாப் TRPயை பிடித்து வரும் ஒரு சில தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் பாரதி கண்ணம்மா முதலில் இருந்த நிலையில், இப்போது பாக்கியலட்சுமி தான் டாப். இந்த வார ரேட்டிங்கில் கூட டாப் 5ல் வந்துள்ளது.
இந்த கதை ஒரு குடும்ப தலைவியின் இன்னல்கள் தாம் சந்திக்கும் சில பிரச்சனைகள் குறித்து எதார்த்தமாக சொல்லப்படும் கதை. இதில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தொடரில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
கோபியை விவாகரத்து செய்ய பாக்யா ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து கொடுத்துவிடுகிறது. அதன் பின் பாக்யாவை வீட்டை விட்டு வெளியில் துரத்த முயற்சிக்கிறார் கோபி. ஆனால், பாக்யா கோபியின் பெட்டியை வெளியில் போட்டு, “நான் ஏன் வெளியே போகணும், நீங்க வெளியே போங்க” என சொல்கிறார். “ஆம்பளைங்க தப்பு செய்வீங்க, ஆனா பொம்பளைங்க எந்த தப்புமே செய்யாம அழுதுகிட்டே ரோட்ல நிக்கணுமா” என பாக்யா கேள்வி கேட்கிறார்.
பாரதி கண்ணம்மா தொடரில், பாரதியின் சந்தேக புத்தியால் வீட்டை விட்டு வெளியில் வந்த கண்ணம்மா தெருத்தெருவாக நடந்து சென்றது பற்றி தான் பாக்கியலட்சுமியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள் என நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.