திருநங்கை ஷிவினை இமிடேட் செய்து அசிங்கப்படுத்தினாரா அசீம்? வைரலாகும் வீடியோ !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வரும் நிலையில், சென்ற வாரம் ரேங்கிங் டாஸ்க் நடைபெற்ற சமயத்தில் அசீமுக்கு 13வது இடம் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், ஆயிஷா, விக்ரமன் ஆகியோரெல்லாம் தகுதியே இல்லாதவர்கள் என பேசி இருந்தார். மேலும், அசீம் தகாத சில வார்த்தைகள் உபயோகித்தால், அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும், சக போட்டியாளரான திருநங்கை ஷிவின் கணேசனை கிண்டல் செய்துள்ளார் அசீம். ஷிவின் செய்தது போன்றே செய்து காட்டி அவரை கலாய்த்திருக்கிறார். ஒரு தேசிய தொலைக்காட்சியில் திருநங்கையை இப்படித் தான் கிண்டல் செய்வதா என்று பார்வையாளர்கள் கொந்தளித்துள்ளனர். அசீமை எச்சரித்தால் மட்டும் போதாது. அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியே ஆக வேண்டும். இதையாவது கமல்ஹாசன் செய்வார் என்று எதிர்பார்க்கிறோம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
This breaks my heart 💔
— Ajay Ashok🅰️🅰️ (@AjayAsho) October 27, 2022
A guy is mocking #LGBTQ on a national television.#Azeem deserves a RED CARD 🟥@ikamalhaasan - Not jus warning, you need to give him a red card and evict.
This will set an example!#BiggBossTamil #BiggBossTamil6pic.twitter.com/0ppNyxTU1y