Viral Tweet: பார்த்திபனை அசிங்கப்படுத்திய அமேசான்? நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என கூறப்பட்டது. இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ, அதற்கு பிறகு இன்டர்வெல் தொடர்ந்து, 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட திரைப்படம். 50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங், சுவாரஸ்யம் கலந்து சொல்லி இருக்கின்றார்கள்.
இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்திற்காக பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இவரது முந்தைய படைப்பான ஒத்த செருப்பு படத்தை மிஞ்சும் வகையில் இரவின் நிழல் படம் அமைந்துள்ளது என கூறப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியானது முதல் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் இப்படத்தை பார்த்து வியந்து பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து, பார்த்திபன் இப்படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என நிரூபித்துவிட்டதாக பாராட்டி இருந்தார்.
இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்று, அதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம், என நடிகர் பார்த்திபன் கூறி வந்த நிலையில், பார்த்திபனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நான் லீனியர் முறையில், ஏற்கனவே 2013ம் ஆண்டு வெளியான ‘பிஷ் அண்ட் கேட்’ என்ற ஈரானிய படம் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறி வந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு பார்த்திபனின் ரசிகர்கள் அப்போது பொங்கி எழுந்து தங்களுடைய வெறுப்பை வெளிக்காட்டினர். இந்நிலையில், இரவின் நிழல் படத்தை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள நிலையில், அமேசான் ப்ரைம் தளத்திலும், IMDB தளத்திலும் நடிகர் பார்த்திபன் தொடர்ந்து ‘இரவின் நிழல்’ திரைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறி வருவது உண்மை அல்ல என்றும், இது இரண்டாவது நான் லீனியர் படம் என தெரிவித்துள்ளது.
இதனை ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ‘வாய்மையே வெல்லும்’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு நடிகர் பார்த்திபன் பொய் சொன்னாரா? என்கிற கேள்வியையும் எழுந்துள்ளது.
வாய் வெல்லாது. வாய்மையே வெல்லும்.
— Blue Sattai Maran (@tamiltalkies) November 12, 2022
Iravin Nizhal is not the first single shot movie. Mentioned in Amazon Prime and IMDB site. pic.twitter.com/396QDgrGmw