'ஈஸியா வாய்ப்பு கிடைக்குது..' ஷங்கர் மகள் அதிதியை தாக்கினாரா நடிகை ஆத்மிகா.. வைரலாகும் பதிவு..

Does aathmika posts indirectly about aditi shankar tweet getting viral on social media

ராஜிவ் மேனன் இயக்கத்தில் குறும்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஆத்மீகா. நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால் சில குறும்படங்களில் நடித்த இவர், மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

Does aathmika posts indirectly about aditi shankar tweet getting viral on social media

அதனைத் தொடர்ந்து, கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். மேலும், தற்போது, காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசூரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளை ஈர்க்க, பிற நடிகைகளை போல தனது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் விடாது சோசியல் மீடியா தளங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மீகா.

Does aathmika posts indirectly about aditi shankar tweet getting viral on social media

இந்நிலையில், இவர் தற்போது பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, ‘சிலருக்கு வாய்ப்புகள் ஈஸியாக கிடைத்துவிடுகிறது.. ஆனால் மற்றவர்களின் நிலைமை.. பாத்துக்கலாம்’ என பதிவு போட்டுள்ளார்.

Does aathmika posts indirectly about aditi shankar tweet getting viral on social media

அதைப்பார்த்த ரசிகர்கள் பலர், தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது. பிரபல பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் மகள் அதிதி பற்றி தான் இவர் பதிவு மறைமுகமாக போட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Does aathmika posts indirectly about aditi shankar tweet getting viral on social media

அதிதி ஷங்கர், தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Share this post