கவின், நெல்சன், பிரியங்கா என துபாயில் ஜாலியோ ஜிம்கானா செய்யும் டாக்டர் டீம்.. டிரெண்டாகும் வீடியோ!

Doctor and beast team spending vacation in dubai video getting viral

கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்ததை தொடர்ந்து விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் நெல்சன் திலீப்குமார்.

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

Doctor and beast team spending vacation in dubai video getting viral

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே அதிகம் பெற்றது.

இதனால் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது.

Doctor and beast team spending vacation in dubai video getting viral

இதனிடையே நெல்சன் அடுத்து ரஜினியின் 169 படத்தை இயக்கவுள்ளார். பீஸ்ட் பட விமர்சனங்கள் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தாலும், தலைவர் 169 படத்தை இயக்கும் முற்போக்கில் கவனம் செலுத்தி வருகிறார் நெல்சன்.

Doctor and beast team spending vacation in dubai video getting viral

இந்நிலையில், டாக்டர் பட டீமுடன் துபாய் சுற்றுலா சென்றுள்ளார் நெல்சன் திலீப்குமார்.

டாக்டர் படத்தில் இருந்தே இயக்குநர் நெல்சன் கேங்கில் ஒருவராக மாறி விட்டார் பிரியங்கா மோகன்.

Doctor and beast team spending vacation in dubai video getting viral

பீஸ்ட் படத்தின் ஜாலியோ ஜிம்கானா ஷூட்டிங் மற்றும் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் என அனைத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது மனைவி மோனிஷா நெல்சன், நடிகர் கவின், ரெட்டின் கிங்ஸ்லி, சுனில், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலரும் துபாய் டூருக்கு சென்றுள்ளனர் .

Doctor and beast team spending vacation in dubai video getting viral

டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ள பிரியங்கா மோகன் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

Doctor and beast team spending vacation in dubai video getting viral

இந்நிலையில், துபாய்க்கு டூர் சென்றுள்ள இவர்கள், அங்கே அடிக்கும் லூட்டிகளை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர்.

டாக்டர், பீஸ்ட் படங்களில் காமெடியனாக கலக்கிய ரெட்டின் கிங்ஸ்லியுடன் பிரியங்கா மோகன் ஆடும் டான்ஸ் ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்துகிறது.

Share this post