'பாட்டி வயசுல கல்யாணம்.. நயன்தாராவுக்கு IVF மையங்கள் உதவனும்' மோசமாக கமெண்ட் செய்த டாக்டர்.. பளார் விட்ட சின்மயி

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

கேரளா மாநிலத்தை சேர்ந்த நயன்தாரா, 2004ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தப்படமே சூப்பர்ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். இப்படத்தில் ஹோம்லியான லுக்கில் சில கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடித்திருந்தார்.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

கஜினி, சிவகாசி, வல்லவன் போன்ற போன்ற படங்களில் சூர்யா, விஜய், சிம்பு போன்ற தமிழ் டாப் நடிகர்களுடன் நடித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார்.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

கோலமாவு கோகிலா, டோரா, கொலையுதிர் காலம் போன்ற படங்களில் நடித்து தனக்கென இடத்தை பிடித்தார்.

இதன் நடுவே, நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குனர் ஆன, விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா கூறியிருந்தார்.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

இந்நிலையில், மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் இன்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

திருப்பதியில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற விக்கி - நயன்தாரா புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

இந்நிலையில், திருமணத்திற்கு முன்னதான பிரஸ் மீட்டில் அறிவித்தது போலயே, தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரஸ் மீட்க்கு வந்து செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது எதிர்காலத்திற்கு அனைவரது ஆசிர்வாதமும் தேவை என கூறி நன்றி கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 12 நண்பகல் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். கேரளாவின் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற நட்சத்திர ஜோடி வந்துள்ளனர் என்றும், சில நெருங்கிய உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

கொச்சியில் உள்ள பழமை வாய்ந்த கோவில் ஒன்றில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம் செய்துள்ளனர். கோவிலில் அவர்கள் இருக்கும் புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

இந்நிலையில், நடிகை நயன்தாராவை மருத்துவர் ஒருவர் கிண்டலடித்து பதிவிட்டுள்ளதை பாடகி சின்மயிசமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து கடுமையாக கண்டித்துள்ளார். அந்த மருத்துவர் தனது பேஸ்புக் பக்கத்தில் நயன்தாரா குறித்து பதிவிட்டுள்ள கமெண்ட்டில், ‘நயன்தாராவின் நடிப்பு திறமைக்கு மதிப்பு தருகிறேன். ஆனால் பாட்டி வயசுல (40 வயது) குடும்பம், குழந்தை என அவரின் இந்த முடிவை நினைக்கும்போது சிரிப்பு வருகிறது. அவருக்கு கருத்தரிப்பு மையங்கள் உதவி செய்யும்னு நம்புகிறேன்’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

Doctor abusive comment against nayanthara made chinmayi angry

அந்த மருத்துவரின் கமெண்ட்டை பார்த்து கடுப்பான பாடகி சின்மயி, மருத்துவக் கல்லூரிகளில் பாலினப் பாகுபாடு மற்றும் பெண் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் எதிர்கொள்ளும் பாலினச் சார்பு குறித்து எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது இது கிடைத்தது. சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நடிகை குறித்து இந்த அற்புதமான மருத்துவர் பதிவிட்ட மோசமான கருத்து” என குறிப்பிட்டு அந்த மருத்துவர் பதிவிட்ட கமெண்ட்டின் ஸ்கிரீன் ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார் சின்மயி.

Share this post