காலேஜ்'ல் தன் உருவத்தை மோசமாக கேலி செய்து SlamBook எழுதியதை வேதனையுடன் பகிர்ந்த திவ்யபாரதி!
மாடலாக இருந்து நடிகையாக ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்யாபாரதி. ஹாட் structure , மாடர்ன் ஸ்டைல், கிளாமர் லுக் என இளசுகளை சுத்தலில் விட்ட திவ்யா ஒரே படத்தில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பேச்லர் திரைப்படமானது, லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
மேலும், வெளிப்படையான வசனங்களும், காதல் காட்சிகள் என இளசுகள் விரும்பும் வண்ணத்தில் இருந்தது. இப்படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதை பெற்றார் திவ்யா பாரதி. பேச்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் திவ்யா, மதில் மேல் காதல் என்னும் படத்தில் பிக் பாஸ் முகென் ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகர் கதிர் ஜோடியாக ஆசை, இயக்குனர் சேரன் இயக்கவுள்ள வெப் சீரியஸிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும், பட வாய்ப்புகளுக்காக பிற நடிகைகளை போல தனது ஹாட் புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதே நேரம் இவரின் உடல் அமைப்பு குறித்து கேலி கமெண்ட்களும் வரும்.
இந்நிலையில் உருவக்கேலி குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி. அதில், சமீப நாட்களில், எனது உடல் வடிவம் போலியானது, நான் ஹிப் பேட்களைப் பயன்படுத்துகிறேன் அல்லது என் இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த நாட்களில், Fanta Bottle Structure, எலும்புக்கூடு போன்று மிகவும் மோசமான கருத்துக்களை என் உடல் அமைப்பை வைத்து கூறினார்கள்.
எனது கல்லூரி நாட்களில் எனது ஸ்லாம் புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தை இணைத்துள்ளேன், அங்கு எனது வகுப்புத் தோழி ஒருவர் எனது உடல் அமைப்பைக் கேலி செய்து வரைந்ததை நீங்கள் பார்க்கலாம் இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது; மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது. அது எந்த வகையிலும் என் தவறு அல்ல. அதன் பின்னர் 2015ல், நான் ஒரு இன்ஸ்டா கணக்கை ஆரம்பித்து எனது மாடலிங் பயணத்தை தொடங்கி உடல்வாகுக்காக பாராட்டுக்களை பெற ஆரம்பித்தேன்.
நான் ஜிம்மிற்கு போனதே இல்லை என்றாலும் பலர் எனது வொர்க்அவுட் பற்றி கேட்கத் துவங்கினர். அனைத்திற்கும் எப்போதும் வெறுப்பவர்களும், ரசிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும், நம் குறைகளை நாம் எப்படிப் பறைசாற்றுகிறோம் என்ற சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது என்பதையும் உணர்ந்தபோது, அது எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது.
விமர்சனங்களை மனதில் கொள்ளாத வரையிலும், பாராட்டுக்களை நம் தலையில் சுமக்காத வரையிலும், நாம் எப்போதும் வலிமையாகவும் அன்பாகவும் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.