"சீரியல்'ல வேலை செய்யவிடாம தொந்தரவு செஞ்சாங்க.." சீரியலில் இருந்து விலகியது குறித்து மனம்திறந்த திவ்யா கணேஷ்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ். இந்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் திவ்யா.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய செல்லம்மா என்ற சீரியலில் மேகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
தற்போது திவ்யா கணேஷ் செல்லம்மா சீரியல் இருந்து விலகிக் கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக இந்த சீரியலில் இனி ஸ்ரேயா சுரேந்தர் நடிக்கப் போவதாகவும் தெரியவந்துள்ளது. தனது சொந்த காரணங்களுக்காக சீரியலில் இருந்து விலகினார் என்று செய்தி வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் லைவ் வீடியோ ஒன்றில் பேசிய திவ்யா, நான் சொந்த காரணங்களுக்காக விலகவில்லை.
செல்லம்மா தொடரில் வேலை செய்யும் போது என்னை வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை என்றால் வேலையை விடுவது தானே முறை அதனால் தான் விலகிவிட்டேன் என்று பேசியுள்ளார். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பேன் அந்த சீரியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.