அந்த 2 பெண்களை கூடவே வெச்சுட்டு தான் கதை கேட்கிறார்.. விஜய் சேதுபதி செய்கையால் புலம்பும் இயக்குனர்கள்..!

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

தற்போது, விடுதலை, காந்தி டாக்ஸ், ஹிந்தியில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என முன்னணி நடிகர்கள் படங்களில் தலைகாட்டி வருகிறார்.

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதியிடம், பல புதுமுக இயக்குனர்கள் தற்போது கதை சொல்லவே தயங்குகின்றார்களாம். ஏனென்றால் விஜய் சேதுபதி கதை கேட்கும் போது அருகில் எப்போதும் இரண்டு பெண்களை வைத்துக்கொண்டு தான் கதை கேட்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கதை சொல்ல வரும் இயக்குனர்களை அந்த பெண்களை பார்த்தே கதை சொல்ல சொல்கிறாராம் விஜய் சேதுபதி.

directors shocked about vijay sethupathi activities in recent days information viral

இதன் காரணமாக பல இயக்குனர்கள் அப்சட்டில் இருக்கின்றார்கள் என தகவல் வந்துள்ளது. மேலும் அந்த இரண்டு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு சொல்லி தரும் பெண்கள் என வெளியில் பேசி வருகிறார்களாம். அவர்கள் கதை நன்றாக இருக்கின்றது என கூறினால் விஜய் சேதுபதி அக்கதையில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்றும் தகவல்கள் வருகின்றன. இதனை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post