'மஞ்சு வாரியர் ஆபத்தில் இருக்கிறார்.. அவரை காணவில்லை'.. வைரலாகும் சர்ச்சை பதிவு..

Director sanal kumar posts about manju warrier life is in danger

மலையாள மொழியில் டாப் நடிகையாக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். வயது 40திற்கு மேல் ஆனாலும் பார்க்க அதே அழகுடன் இருப்பது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மலையாள மொழியில் ஏகப்பட்ட படங்களில் நடித்து நிறைய பேரின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் இவர், மொழிகள் கடந்து ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்திருக்கிறார்.

Director sanal kumar posts about manju warrier life is in danger

சமீபத்தில் தமிழ் மொழியில் அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த சில நாட்களாக காணவில்லை. அவர் ஆபத்தில் இருக்கிறார் என கூறியுள்ளார்.

Director sanal kumar posts about manju warrier life is in danger

பிரபல மலையாள இயக்குநர் சணல் குமார் சசிதரன் தனது முகநூல் பக்கத்தில், “பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவர் கந்து வட்டிக்காரர்கள் சிலரின் காவலில் இருக்கிறார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு நான்கு நாட்களாகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, சம்பந்தப்பட்ட வேறு யாரோ பதிலளிக்கவில்லை.

Director sanal kumar posts about manju warrier life is in danger

மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. கேரளாவில் உள்ள ஊடகங்கள் இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாதது போல் நடிக்க முயல்வது அச்சமாக உள்ளது.

Director sanal kumar posts about manju warrier life is in danger

தேசிய அளவில் பாராட்டப்பட்ட ஒரு திரைப்பட நடிகையின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை எழுப்பப்பட்டிருப்பதால், தேசிய ஊடகங்கள் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்” என கூறியுள்ளார். இது தற்போது மலையாள திரையுலகில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Share this post