அஜித் படத்தை கலாய்த்து ட்வீட் செய்தாரா இயக்குனர் ரத்னகுமார்.. வைரலாகும் பதிவு !

Director rathna kumar tweet getting viral which targets ajith film

மது என்னும் குறும்படத்தை மேயாத மான் என்னும் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் ரத்ன குமார். இப்படம் இளசுகளால் மிகவும் கொண்டாடப்பட்ட திரைப்படமாக அமைந்தது.

Director rathna kumar tweet getting viral which targets ajith film

இதனைத் தொடர்ந்து, சர்ச்சையை கிளப்பிய ஆடை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் அமலா பால் நடிகையாக நடித்திருந்தார்.

Director rathna kumar tweet getting viral which targets ajith film

பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இணை ரைட்டராக பணியாற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இணை ரைட்டராக பணியாற்றியுள்ளார்.

Director rathna kumar tweet getting viral which targets ajith film

இந்நிலையில், இவர் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் செம வைரல் ஆகி வருகிறது.

இன்று, தமிழக திரையுலகமே எதிர்ப்பார்த்திருந்த விக்ரம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் மாஸாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் ரிவ்யூ கொடுத்து வருகின்றனர்.

Director rathna kumar tweet getting viral which targets ajith film

இந்நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் ரத்னகுமார், விக்ரம் படம் குறித்து ‘’ Loki Sambavam வாழ்த்துக்கள் நண்பா லோகேஷ் கனகராஜ் “ என்று பதிவு செய்துள்ளார்.

Director rathna kumar tweet getting viral which targets ajith film

இந்த பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்கள் கொண்டாடும் என்று ஒரு போல்டெர் ஒன்று உள்ளது. இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம், வலிமை ஆகிய படங்களை குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் என கூறப்பட்டு வந்தது. இதை குறிப்பிட்டு தான் ரத்னகுமார் இப்படியொரு பதிவு வெளியிட்டுள்ளாரா என சர்ச்சை கிளம்பி வருகிறது.

Share this post