ராபர்ட் வெளியே போகணும், அவருக்கு பதில் கனவுகளுடன் வந்த இந்த 2 பேர் தொடரட்டும்' ரச்சிதா கணவர் தினேஷ் பதிவு.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், ஷெரினா, வி.ஜே.மகேஸ்வரி எவிக்ட் ஆகி வெளியேறினர்.
இதில் ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான ரச்சிதாவை பார்த்ததும் என்னுடைய கிரஷ் நீங்க தான் என முதல் எபிசோடிலேயே சொல்லிவிட்டார். அதையடுத்து அவர் தொடர்ந்து ரச்சிதாவிற்கு நூல்விட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் அவரை மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராபர்ட்டில் டார்ச்சர் தாங்க முடியாமல் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார் ரச்சிதா.
அதன்பின்னர் அவரை விடாமல் பாலோ பண்ணி வரும் ராபர்ட், சின்ன சின்ன காதல் லீலைகள் செய்து வருவதை நெட்டிசன்கள் வீடியோ போட்டு கலாய்த்து தள்ளி வருகின்றனர். ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதா கையை வலுக்கட்டாயமாக பிடித்திருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியது.
இதனிடையே சமீபத்திய பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா எப்படி விளையாடுகிறார், ராபர்ட் மாஸ்டரின் செயல்பாடுகள் குறித்தும் ரச்சிதாவின் கணவர் தினேஷ் இடம் கேட்ட போது, அதன்படி ராபர்ட் செய்வதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு காமெடியாக இருப்பதாக கூறி உள்ள அவர், ரச்சிதா மிகவும் தெளிவாக விளையாடி வருவதாகவும், அவர் இறுதிவரை செல்வார் என்கிற நம்பிக்கை இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தினேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் சினிமாவில் பல வாய்ப்புகளை கோட்டை விட்ட ராபர்ட்டுக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். அதையும் கோட்டை விட்ட ராபர்ட் எலிமினேட் ஆவது தான் சரி தான். ராம் மற்றும் மணிகண்டன் பல கனவுகளுடன் இந்த பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட்டு காப்பாற்றுவது தான் எனக்கு சரியாகப்படுகிறது. அவர்களின் கனவுகள் வெற்றி பெற வழி செய்வோம் என்று பதிவிட்டு இருக்கிறார்.