"விஜய் தான் நம்பர் 1.. 'வாரிசு' படத்துக்கு அதிக தியேட்டர் வேண்டும்.." - தில் ராஜு பேச்சால் எழுந்த சிக்கல்!
எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் தொடர்ந்து விஜய் - அஜித் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் திரைப்படம் குறித்த அறிவிப்பு வந்தாலே, சமூக வலைத்தளங்கள் தொடங்கி திரையரங்குகள் வரை கொண்டாட்டமாக மாறிவிடும்.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித் படங்கள் வெளியாகும் போது, இருதரப்பு ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள் என்பது தெரிந்ததே.
2023ம் வருடம் பொங்கலுக்கு அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மோத உள்ள நிலையில், இதுகுறித்து விஜய் என்ன சொன்னார் என்று பிரபல நடிகர் ஷாம் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
அதே போல், அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் 3வது முறையாக இயக்கி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் ஹார்டிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களின் ப்ரோமோஷன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதே போல அஜித்தின் துணிவு படத்தில் இருந்து வெளியான சில்லா பாடலையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகுவதால் எந்த திரைப்படத்தில் திரையரங்கம் அதிகளவில் ஒதுக்கப்படும் என கேள்வி எழுந்தது. துணிவு படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்படங்களை வெளியிடுவதில் முன்னனியாக உள்ளது. எனவே, துணிவு அதிக திரையரங்கை கைப்பற்றக்கூடும் என தகவல் வெளியானது. ஆனால் இரண்டு படத்திற்கும் 50:50 என்கிற முறையில் திரையரங்கம் ஒதுக்கப்படும் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
ஆனால் தமிழகத்தில் விஜய் தான் நம்பர் 1 நடிகர், அவருக்கு தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு சம அளவில் திரையரங்கம் பிரித்து கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே உதயநிதியை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்கம் ஒதுக்கும் படி கேட்க இருப்பதாக தில் ராஜூ தெரிவித்துள்ளார்.
Dil Raju accusing RedGiant for not giving enough theatres for #Varisupic.twitter.com/FoVN2Lclc5
— MOVIE HERALD (@movieherald) December 15, 2022