தடபுடலாக நடந்த திருமணம்.. வரலட்சுமி கல்யாண செலவு மட்டும் இத்தனை கோடியா? ..

did-sarathkumar-spent-800-crs-varalaxmi-wedding

கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

did-sarathkumar-spent-800-crs-varalaxmi-wedding

வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

did-sarathkumar-spent-800-crs-varalaxmi-wedding

இந்நிலையில், வரலட்சுமி திருமணத்திற்கான செலவு குறித்து நடிகர் சரத்குமார் தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருக்கிறார். வரலட்சுமி திருமணத்திற்கு 800 கோடி செலவு செய்ததாக, யூடியூபில் செய்தி போடுகிறார்கள். அந்த 800 கோடி எங்கே இருக்கிறது என்று கூட எனக்கு தெரியவில்லை என்று சரத்குமார் தெரிவித்து இருக்கிறார்.

did-sarathkumar-spent-800-crs-varalaxmi-wedding

மேலும், எனக்கு 35 வயதாகிறது சாரி வயசை தப்பா சொல்லிட்டேன். இப்போதும், நான் திடமாக இருக்க சுத்தமான பழக்கவழக்கங்கள் தான் காரணம். ஆனால், தற்போது இளம் தலைமுறையினர் போதை, மது, கஞ்சாவுக்கு அடிமையாக விட்டிருக்கிறது இந்த அரசு என பிரச்சாரத்தில் சரத்குமார் பேசி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அதெல்லாம் சரி கடைசி வரைக்கும் அந்த கல்யாண செலவை அண்ணன் சொல்லவே இல்லையே என்று கமெண்ட்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Share this post