ஹோட்டல் ரூமில் அடி வாங்கிய அஜித்.. பிரபல இயக்குனர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், தனது கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
தற்போது, எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது அஜித் பற்றி சில விஷயங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அப்படி நான் கடவுள் படத்தில் இயக்குனர் பாலா கதையை கூறும் போது அஜித்தை அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து சினிமா விமர்சகர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் இருக்கிற Palmgrove ஹோட்டலில் நான் கடவுள் கதையை கூற பாலா அஜித்தை அழைத்திருக்கிறார். அங்கு பாலாவுடன் மூன்று பேர் இருந்த நிலையில், அஜித் கதையை ஒரு லைன் அப் கேட்டிருக்கிறார். அகோரிகள் கதை என்று பாலா, தன் பாணியில் எடக்குமுடக்காக கூறியிருக்கிறார். அஜித் முடியில் ஆரம்பித்து பேசிய நிலையில், அஜித் அப்செட்டாகி வேண்டாம் என்று எழுந்திருக்கும் போது பின்னால் இருந்தவர் அஜித்தை முதுகில் தட்டி உட்கார வைத்திருக்கிறார்.
நீ என்ன பெரிய ஹீரோவா என்று அப்போது கேட்கவே, அஜித் வெளியில் வந்து 20 நாட்கள் யாரையும் பார்க்காமல் அவமானத்தில் இருந்துள்ளார். இதுகுறித்து பாலா எனக்கு ஒன்னும் தெரியாது, எனக்கு தெரிந்த அபிமானி ஒரு சின்ன தட்டு தட்டினார் என்று கூறியதாக விமர்சகர் செய்யார் பாலா கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Hotel Roomல் அடி வாங்கிய அஜித்
— வாத்தி T V A 🕴 (@mangathadaww) December 16, 2022
பாபா Party யை நம்பிய அஜித் ரசிகர்கள் இதையும் நம்புவார்களா ? #Varisu pic.twitter.com/4hI7yW3LjY