GOAT படத்தில் அஜித்?.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு..!

did-ajith-acting-comeo-role-in-vijay-goat-movie

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.

did-ajith-acting-comeo-role-in-vijay-goat-movie

பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

did-ajith-acting-comeo-role-in-vijay-goat-movie

இப்பட பணிகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட பணிகள் ஏறத்தாழ முடிவுற்று உள்ளது.

did-ajith-acting-comeo-role-in-vijay-goat-movie

இந்நிலையில், சமீபத்தில் தான் இப்படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், நடிகர் அஜித்தை சமீபத்தில் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதனை ரீ டுவிட் செய்த கோட் பட நடிகர் வைபவ் சில சைலண்ட் இமேஜ்களை அதில் பதிவு செய்துள்ளார். இதில், சைலன்ட் எமோஜ் செய்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கோட்படத்தில் அஜித் நடிக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் இந்த விஷயம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this post