Viral Video: 'எல்லாம் அவளை மறக்கத்தான்..' பொன்னியின் செல்வன் விக்ரம் டயலாக்கை மேடையில் பேசிய துருவ் !
பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இதன் முதல் பாகமான பொன்னியின் செல்வன் 1, உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஏரளமான திரை பிரபலங்கள் கனவு கண்ட நிலையில், அதனை மணிரத்னம் சாதித்துக் காட்டி உள்ளார். மேலும், திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய ‘பொன்னியின் செல்வன்’, வசூலையும், பாசிட்டிவ் ரிவ்யூக்களையும் அள்ளி குவித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் பேசிய ‘ அவளை மறக்கத்தான்’ என்னும் டயலாக் செம வைரலாகி நிறைய மீம்ஸ் உருவாகி வருகிறது.
இந்நிலையில், அதனை அவரது மகன் துருவ் விக்ரம் தற்போது ஒரு மேடையில் பேசியுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கு அப்படியே விக்ரம் போன்ற குரல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Dhruv 🔥👌 reciting @chiyaan's dialogues from #PonniyinSelvan1!
— Siddarth Srinivas (@sidhuwrites) October 16, 2022
pic.twitter.com/seYMRXsTxB