DD கிட்ட LOVE சொல்ல போனேன்.. ப்ரோபோஸ் செய்ய இருந்த நேரத்தில் நடந்த விபரீதம்..!
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், அதர்வா மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த மத்தகம் என்ற வெப் தொடரிலும் நடித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதை எல்லாம் கடந்து, தற்போது, 39 வயதாகும் DD இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வரும் டிடி தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட VJ ரமேஷ் நல்லாயன் எனக்கு டிடி மீது காதல் ஏற்பட்டது. இது பற்றி அவரிடம் பேசலாம் என்று இருந்தேன். ஆனால், அதற்குள் டிடியின் திருமண நிச்சயம் குறித்த தகவலை அறிந்தேன். ஒரு நல்ல பெண்ணை மிஸ் பண்ணிட்டோம் என்கிற கவலை எனக்குள் இருந்தது. அதன் பின்னர் டிடி திருமணமாகி விவாகரத்தானது தொடர்பாக செய்திகள் எனக்கு தெரிய வந்தது.
அந்த தகவல் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. இதையடுத்து, டிடியை மறுமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறாரா என்பது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினேன். அதனால், காபி வித் காதல் படப்பிடிப்பில் டிடியிடம் பேசினேன். ஆனால், அவர் அதைப் பற்றி பேச தயாராக இல்லை என்று VJ ரமேஷ் நல்லாயன் தெரிவித்துள்ளார்.