'யாராவது தன்னை பற்றி தானே அசிங்கமா பேச சொல்லுவாங்களா?' கடுப்பான தர்ஷா குப்தாவின் viral tweet!

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

இயக்குனர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன், தர்ஷா குப்தா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ஓ மை கோஸ்ட். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் ஹீரோயினியாக நடிப்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யோகி பாபு, சதிஷ், ரமேஷ் திலக், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம பிரம்மாண்டமாக நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் நடந்த ஒரு சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சன்னி லியோன் யாரும் எதிர்பாராத விதமாக பச்சை நிற பட்டுப்புடவையில் அழகு தேவதை போல் வந்திருந்தார். நடிகை தர்ஷா குப்தா கவர்ச்சிக்கு குறைவில்லாத உடையில் வந்திருந்தார்.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

இந்நிலையில், நடிகர் சதீஷ் மேடைக்கு வந்து பேசும்போது, பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னி லியோன் பட்டு புடவை கட்டி வந்திருக்காங்க.. ஆனால் கோயம்புத்தூரில் இருந்து வந்த பொண்ணு எப்படி வந்திருக்காங்க பாருங்க? என இருவருடைய ஆடையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் பல்வேறு சர்ச்சையை கிளப்பியது.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

நடிகர் சதீஷின் பேச்சுக்கு எதிராக நடிகை சின்மயி, இயக்குனர் நவீன் போன்ற பலர் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பம் என்றும் அதனை நீங்கள் கூறாதீர்கள் என பல்வேறு கருத்துக்களை கூறி வந்த நிலையில், நடிகர் சதீஷ் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

இது குறித்து பேசியுள்ள சதீஷ், நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய தோழி, அவர் என்னிடம் பேசும்போது சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என எண்ணி, நான் கவர்ச்சி உடையில் வந்தேன். ஆனால் அவர் பட்டுப்புடவை அணிந்து வந்ததால் அப்செட் ஆகி விட்டேன் என வருத்தத்துடன் கூறியதாகவும், பின்னர் இதனை அவர் மேடையில் தன்னை கூற சொன்னதாகவும் இதன் காரணமாகவே நான் ஆடை குறித்து மேடையில் பேசினேன் தவிர, வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

பெண்கள் ஆடை அணிவது அவர்களுடைய சுதந்திரம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன் என சதீஷ் கூறியுள்ளார். மேலும் நான் பேசிய இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆனால் நான் பல நல்ல விஷயங்களையும் மேடையில் பேசுகிறேன் அதுவும் பேசப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் தர்ஷா குப்தா இந்த வீடியோவுக்கு எதிராக ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

dharsha gupta tweets about actor sathish explanation in audio launch speech

அந்த பதிவில் கூறியுள்ளதாவது “நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகிறார். இது மிகவும் விசித்திரமான இருக்கிறது. யாராவது என்னைப் பற்றி ஸ்டேஜில் நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்வளவு ஹர்ட்டாதான் இருந்துச்சு பட் நான் அதை பெருசா காட்டிக்கல . ஆனால் இப்போ இப்படி சொல்றது சரியானது அல்ல… என்று ஆடை விஷயத்தை குறித்து பதிவிட்டுள்ளார். எனவே சதீஷ் பொய்யாக இப்படி ஒரு தகவலை வீடியோவில் கூறியுள்ளது, இந்த விஷயத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.

Share this post