'ஏன்.. என்ன தப்பா ப்ரொஜெக்ட் பண்றீங்க..' பொது இடத்தில் கதறி அழுத தர்ஷா குப்தா

தனது சிறு வயது முதலே மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு விளம்பர படங்களில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இவர், தற்போது கோயம்பத்தூரில் வசித்து வருகிறார். மாடலிங் செய்யும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால், ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தற்போது, மக்கள் ஆதரவை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த, சன் டிவியில் ‘மின்னலே’ தொடரிலும், விஜய் டிவியில் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், புகழ் உடன் கொண்ட சேட்டைகள் மூலம் சோசியல் மீடியா பேமஸ் ஆகி இளசுகள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும், நடிப்புத் திறமை மற்றும் கவர்ச்சி உடல்வாகு தோற்றம் கொண்ட தர்ஷா குப்தா, ரிச்சர்ட் ஹீரோவாக நடித்து வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார்.
மேலும் இவர், சமீபத்தில் வெளியான “ஓ மை கோஸ்ட்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சன்னி லியோன், சதிஷ், ஜிபி முத்து போன்ற பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரஸ் ஷோவிற்கு வருகை தந்த தர்ஷவின் உடையை அவரின் அசிஸ்டண்ட் மிதித்து விட்டார். அதற்கு அந்த நபரை பார்த்து தர்ஷா கோவமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இதை குறித்து பத்திரிகையாளர்கள் தர்ஷாவிடம் கேள்வி எழுப்பினார்கள். பதில் அளித்த அவர்,”எதற்கு என்னை தவறாக ப்ரொஜெக்ட் செய்கிறீர்கள். நான் உங்களுக்கு என்ன பாவம் செய்தேன். என்னுடைய ஆடையை யார் மிதித்தார் என்று தான் பாத்தேன். அதற்கு நான் கோவப்படவில்லை” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.
நான் என்ன பாவம் பண்னேன் - கதறி அழுத தர்ஷா குப்தா!#ZeeTamilNews #DharshaGupta #Crying #ViralVideo #Shorts pic.twitter.com/5fZd3XnvQp
— Zee Tamil News (@ZeeTamilNews) December 30, 2022