’தி கிரே மேன்’ புரோமோஷனில் மகன்களுடன் தனுஷ்.. ரஜினியை போலவே பேரன்.. வைரலாகும் வீடியோ…

Dhanush with his sons in the gray man movie promotion

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

Dhanush with his sons in the gray man movie promotion

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார்.

Dhanush with his sons in the gray man movie promotion

தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

Dhanush with his sons in the gray man movie promotion

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார். மீண்டும் இருவரும் சேரப்போவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.

Dhanush with his sons in the gray man movie promotion

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன், என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ். தற்போது, தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் வரும் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Dhanush with his sons in the gray man movie promotion

அவெஞ்சர்ஸ் படத்தை எடுத்த ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பிரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதில் நடிகர் தனுஷும் கலந்துக் கொண்டுள்ளார்.

Dhanush with his sons in the gray man movie promotion

இப்படத்தில் எப்படி கமிட்டாகி நடித்து முடித்தேன் என்பது குறித்து தனக்கே தெரியவில்லை என்று அவர் இந்த பிரமோஷனின் போது தெரிவித்துள்ளார். இந்நிலையில், படத்தின் புரோமோஷன் வெளிநாடுகளில் நடந்து கொண்டிருப்பதால் தவறாது எல்லா இடங்களுக்கும் தனுஷ் சென்று புரோமோஷனில் கலந்து கொண்டு உரையாடி வருகிறார்.

Dhanush with his sons in the gray man movie promotion

மேலும் நேற்று நடந்த புரோமோஷனில் தன் இரு மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவை தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார் தனுஷ். புகைப்படங்கள் எடுக்கும் போது மகன்களையும் அழைத்து பக்கத்தில் நிற்க வைத்து புகைப்படங்கள் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this post