Full Comedy Entertainer படத்தை இயக்கவுள்ள நடிகர் தனுஷ்.. இதுல காமெடிக்கு பஞ்சமே இருக்காது !

Dhanush to direct full comedy entertainer film

தமிழ்த் திரையுலகில் ஆரம்ப காலகட்டத்தில் பலவிதமான விமர்சனங்களை சந்தித்து தற்போது, நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் திரையுலகம் மட்டுமில்லாது பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றவர்.

Dhanush to direct full comedy entertainer film

தற்போது கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வரும் இவர், தமிழில் மித்ரன் ஜவகர் இயக்கும் திருச்சிற்றம்பலம், செல்வராகவனின் நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

2017ம் ஆண்டு வெளியான பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ், அவரது அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஆகியோரை வைத்து தனுஷ் இயக்க நினைத்த திரைப்படம், முதல் கட்ட படப்பிடிப்புக்கு பின் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது, மீண்டும் நடிகர் தனுஷ் படம் இயக்க உள்ளதாகவும் புதிய படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக இருக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush to direct full comedy entertainer film

இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாகவும், நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், ராமர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post