சோழ மன்னராக அவதாரம் எடுக்கும் தனுஷ்.. வெளியான ஆயிரத்தில் ஒருவன் 2 சர்ப்ரைஸ் அப்டேட்
இயக்குனர்கள் பலர் எடுத்துக்காட்டாக கவுதம் மேனன், ரவிக்குமார், சமுத்திரக்கனி, சசிகுமார் என பலரும் நடிகர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், செல்வராகவன் தற்போது தனது நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதனைத் தொடர்ந்து, காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, NGK, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்ற வித்தியாசமான திரைக்கதைகளை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.
பீஸ்ட், சாணி காயிதம், தற்போது தனுஷ் உடன் நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, இதன் 2ம் பாகம் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் & புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகங்களை இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே செல்வராகவன் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்புக்கு பின் அப்படங்கள் குறித்த எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அந்த படம் எடுக்கப்படுமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. இப்படத்தை 2024ம் ஆண்டு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். அத்துடன் படத்தின் போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர் எந்த கேரக்டரில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தில் சோழ மன்னராக நடித்த பார்த்திபன், அப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது : “ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் அந்த ரோலில் தனுஷ் நடிப்பார். முதல் பாகத்திலேயே அவர் நடிப்பதாக இருந்தது. அவருக்கு பதில் தான் நான் நடித்திருந்தேன். தற்போது இரண்டாம் பாகத்தில் எனக்கு பதில் தனுஷ் நடிப்பார். அவர் நடித்தாலும் சிறப்பாக இருக்கும்” என பார்த்திபன் கூறி உள்ளார்.