ரிலீஸ்க்கு முன்பே லீக் ஆன தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' திரைப்பட காட்சிகள் - படக்குழுவினர் அதிர்ச்சி

Dhanush thiruchitrambalam scenes has been leaked on internet before release

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Dhanush thiruchitrambalam scenes has been leaked on internet before release

இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங் பணி முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.

Dhanush thiruchitrambalam scenes has been leaked on internet before release

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெரும் சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளில், திருவிழாவில் தனுஷுடன் நித்யா மேனன் நடனமாடும் காட்சிகளும், ராஷி கண்ணா மற்றும் தனுஷ் இருக்கும் ஒரு காட்சியும் வெளியாகியுள்ளது.

Dhanush thiruchitrambalam scenes has been leaked on internet before release

இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக வைரலாகி வருவதால், தனுஷ் உள்பட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தது. இக்காட்சிகளை இணையதளத்தில் யார் வெளியிட்டது என படக்குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என கேட்டு இருக்கின்றனர் படக்குழு.

Share this post