தனுஷின் திருச்சிற்றம்பலம் Review: சொன்ன மாதிரியே அழ வெச்சுட்டீங்க.. குவியும் பாசிட்டிவ் Reviews
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை தனுஷ் வைத்து இயக்கி வெற்றி படங்களாக கொடுத்த இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’.
இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார்.
இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
உணவு டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ், உயர்நிலைப் பள்ளி தோழி அனுஷாவாக ராஷி கண்ணா, கிராமத்து தென்றல் ரஞ்சனியாக பிரியா பவானி சங்கர், திருச்சிற்றம்பலத்தின் நெருங்கிய தோழி ஷோபனாவாக நித்யா மேனன், கண்டிப்பான இன்ஸ்பெக்டர் நீலகண்டனாக பிரகாஷ் ராஜ், பாசக்கார தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்துள்ளனர்.
இன்று மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் ரசிகர்கள் விமர்சனம் இதோ..
தனுஷ் நடித்த பழம் மற்றும் நித்யா மேனன் நடித்த ஷோபனா இடையே உறவு புதுமையாக பார்ப்பவர்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளது.
அதோடு இந்த மூன்று நாயகிகளில் தனுஷ் யாருடன் ஜோடி சேர்வார் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பிரியா பவானி சங்கர் கிராமத்து லுக்கில், ரஞ்சனி கதாபத்திரமாக நம்மை கவர்கிறார். ராசி கண்ணா தனுஷுடன் செம கெமிஸ்ட்ரியை கொண்டு வந்துள்ளார். அனுஷாவின் சித்தரிப்பு பார்வையாளர்களை அவர் மீது காதல் கொள்ள வைக்கிறது.
Thaaa telugu fans 🔥🔥🔥💥
— Chocoboy2.o ᴸᵉᵗʰᵃˡ ᶠᵒʳᶜᵉ (@Dfan_chocoboy) August 17, 2022
And review 🔥👌
" Thalaiva neenga sonna mariye tears and good feel " #ThiruDhanushFestinTheatres@dhanushkraja Anna ❤️#Thiruchitrambalampic.twitter.com/OWh4GRqYk3
👑 .@dhanushkraja 🔥#Thiruchitrambalam #ThiruchitrambalamFDFS @RohiniSilverScr pic.twitter.com/vf4ZTFCn8x
— DhanushAppu (@VpmKk__DFC) August 18, 2022
👑 .@dhanushkraja 🔥#Thiruchitrambalam #ThiruchitrambalamFDFS @RohiniSilverScr pic.twitter.com/vf4ZTFCn8x
— DhanushAppu (@VpmKk__DFC) August 18, 2022