150 கோடியில் பங்களா.. போயஸ் கார்டனில் கட்டிய வீடு குறித்து மனம் திறந்த தனுஷ்..!

dhanush-reveals-why-he-built-house-in-poes-garden

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். இவரது மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. 2006ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை பிரிவதாக அறிவித்தார்.

dhanush-reveals-why-he-built-house-in-poes-garden

தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷ் ரூ.150 கோடி செலவில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டும் வருகிறது. ரஜினிகாந்த் வசித்து வரும் அதே போயஸ் கார்டனில் தனுஷ் திடீரென இத்தனை கோடிகள் செலவு செய்து வீடு கட்டியதற்கு காரணம் என்ன என்று பலரின் மத்தியில் கேள்வி எழுந்தது.

dhanush-reveals-why-he-built-house-in-poes-garden

இந்நிலையில், ராயன் ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் தனுஷ் நான் யாருன்னு எனக்கு தெரியும். என்னை படைத்த அந்த சிவனுக்கும், என் அப்பா, அம்மாவுக்கும் என் பசங்களுக்கும் என் ரசிகர்களுக்கும் தெரியும் என்று தன்னை பற்றி பின்னாடி பேசுபவர்கள் பற்றிய முதுகில் குத்துபவர்கள் பற்றியும் பேசி இருந்தார். மேலும், ரஜினி, விஜய் குட்டி ஸ்டோரி சொல்வது போல போயஸ் கார்டனில் ஏன் பல கோடியில் வீடு வாங்கி கட்ட ஆசைப்பட்டேன் என்ற ரகசியத்தையும் மேடையிலே ரசிகர்கள் முன் பேசியிருந்தார்.

dhanush-reveals-why-he-built-house-in-poes-garden

அதாவது தலைவர் வீட்டை பார்க்க போயஸ் கார்டனுக்கு சென்றபோது, போலீஸ் அண்ணன்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம், தலைவர் வீடு எங்கே என்று கேட்டதற்கு அங்கேதான் இருக்கு சைலண்டா பாத்துட்டு போயிறணும் என்றார்கள். அப்படியே, நானும் தலைவர் வீட்டை பார்த்துவிட்டு திரும்பினேன். ஆனால், அங்கே இன்னொரு வீட்டுக்கு முன் ஜே ஜேன்னு கூட்டம், அது யாரு வீடுன்னு கேட்டால், ஜெயலலிதா அம்மா வீடுன்னு சொன்னார்கள். அப்படியே வியந்து போய் இந்த பக்கம் ரஜினி சார் வீடு அந்தப் பக்கம் ஜெயலலிதா அம்மா வீடு நடுவில் நாம வீடு கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் என்று தனுஷ் கூறியவுடன் அரங்கில் இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து விட்டனர்.

Share this post