10 வயசு குறைஞ்சுட்டாரு.. வைரலாகும் வாத்தி படத்தில் தனுஷ் லுக் !

Dhanush looks young in vaathi movie

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.

Dhanush looks young in vaathi movie

காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.

Dhanush looks young in vaathi movie

நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார். தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார்.

Dhanush looks young in vaathi movie

ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.

Dhanush looks young in vaathi movie

தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ்.

Dhanush looks young in vaathi movie

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தனுஷின் புகைப்படம் ஒன்று தனுஷ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏறக்குறைய 12வது படிக்கும் பள்ளி சிறுவன் போல இளமையாக தோன்றுவதற்காக பல கிலோவைக் குறைத்துள்ள தனுஷின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Dhanush looks young in vaathi movie

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் மாஸ்டர் மற்றும் ஸ்டூடண்ட் வேடத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதற்காக தன்னை இந்த அளவிற்கு வெயிட் குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post