'நீண்ட போராட்டத்திற்குபின் கிடைத்த வெற்றி.. இதெல்லாம் கனவுல கூட எதிர்பாக்கல..' தனுஷின் வைரல் பதிவு !

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.
பாடகர், லிரிஸிஸ்ட், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்துள்ளார். ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
தற்போது சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை சென்ற தனது 20 வருட சினிமா உலக பயணம் குறித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், கனவில் கூட இதெல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ள தனுஷ், தனது ரசிகர்களுக்கு தங்களது முதல் நன்றியை தெரிவித்துள்ளார்.