தனுஷ் - சிம்பு கூட்டணியில் அடுத்த படம்.. இது யாரும் எதிர்பார்க்காத விஷயமாச்சே..
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் வரிசையில் இரு துருவங்களாக கருதப்படும் நடிகர்கள் சிம்பு - தனுஷ். ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமான இவர்கள் ரசிகர்களால் போட்டி நடிகர்களாகவே கருதப்படுகின்றனர்.
என்னதான் இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் தங்களுக்குள் போட்டி உள்ளது என இருவரும் மறைமுகமாக வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், வெந்து தணிந்தது காடு பட நிகழ்ச்சியில் தனுஷ் திருச்சிற்றம்பலம் பட நிகழ்ச்சியில் பேசியதை மறைமுகமாக சுட்டிக்காட்டி சிம்பு பேசி இருந்தார். இப்படி இருவரையும் இரு துருவங்களாகவே பார்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் சிம்பு நடிகர்களாக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர்களாக விளங்கி வருகின்றனர். மேலும் சமீபத்தில் தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. சிம்புவின் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
இதையடுத்து தற்போது வந்த செய்தி இருவரின் ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குனரானர். இதையடுத்து அவர் இயக்கப்போகும் அடுத்த படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த 2017ம் ஆண்டு தனுஷ் இயக்குனராக பா.பாண்டி படத்தின் மூலம் அறிமுகமானார். ராஜ்கிரண், ரேவதி என பலர் நடித்த இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து தற்போது தனுஷ் தன் அடுத்த படத்தை இயக்கப்போவதாகவும், அப்படத்தில் சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.