விவாகரத்துக்கு பின் மீண்டும் ஒரே வீட்டில் தனுஷ் - ஐஸ்வர்யா..

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவர், இயக்குனர் செல்வராகவன் அவர்களின் தம்பி மற்றும் தயாரிப்பாளர் - இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகன் ஆவார்.
காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென்ற தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், 3, வேலையில்லா பட்டதாரி, வடசென்னை, கர்ணன் போன்ற படங்கள் மூலம் செம ஹிட் ஆகிவிட்டார்.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்கள் எடுத்துவிட்டார். தனது திறமை மூலம் பல விமர்சனங்களையும் தாண்டி பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார்.
ஒல்லியாக இருக்கும் இவனெல்லாம் ஹீரோவா என கேலி கிண்டல் பேசியவர்கள் தற்போது இவர் ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றது பார்த்து விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார்.
தற்போது, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், டோலிவுட்டில் வாத்தி, ஹாலிவுட்டில் தி கிரே மேன் என அடுத்தடுத்து பிசியாக இருந்து வருகிறார் தனுஷ்.
இந்த வருட தொடக்கத்தில் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவுடனான 18 வருட வாழ்க்கையை முடித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார். அது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. விவாகரத்து பெற்ற தனுஷ் தனது மகன்களுடன் அவ்வப்போது அதிக நேரம் செலவிட்டு வருகிறார்.
விவாகரத்துக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பார்ட்டியில் சந்தித்துக்கொண்ட இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.
அந்த வீட்டிற்கு, தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். விவாகரத்துப்பின் இருவரும் ஒரே வீட்டிற்கு சென்று வருவதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.