சிகரெட்டை ஊதி தள்ளும் பிக்பாஸ் தனலட்சுமி.. வைரலாகும் வீடியோ இதோ.. அப்போ எல்லாமே பொய்யா?
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பொதுமக்களில் ஒருவராக பங்கேற்றுள்ள தனலட்சுமி குறித்து பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இவர் ஈரோடை சேர்ந்தவர். இவர் டிக்டாக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். தற்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.
சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல ஹேட்டர்ஸ்களை உருவாக்கிக்கொண்டார். சிலர் தனலட்சுமியை இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். மேலும், தனலட்சுமி நாமிநேசனின் வந்தால் நிச்சயம் அவரை வெளியேற்றுவோம் என்று ஜி பி முத்து ஆர்மி சமூக வலைதளத்தில் சபதம் போட்டு வருகிறது. இதனால் இவரை தாக்கி பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.
மேலும், இவர் டிக் டாக்கில் போட்ட பல வீடியோக்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் முட்டைகளை போட்டு உடைத்து நாசம் செய்த வீடியோவை பகிர்ந்து ‘இவர் தான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவரா’ என்று கேலி செய்தனர். இப்படி ஒரு நிலையில் இவர் சிகரெட்டை ஊதி தள்ளி ரீல்ஸ் போட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து இவரை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றார்.