அப்பா இல்ல.. ஏழ்மை..னு சொன்னது எல்லாமே பொய்? ரீல்ஸ் வீடியோவால் வசமாக சிக்கிய தனலட்சுமி!
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். ஜிபி முத்து மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியேறினார். மேலும், நேற்று ஷெரினா எவிக்ட் ஆகி வெளியேறினார்.
சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில குறும்படங்களிலும் பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல ஹேட்டர்ஸ்களை உருவாக்கிக்கொண்டார். சிலர் தனலட்சுமியை இந்த சீசன் ஜூலியா? வனிதாவா? அர்ச்சனாவா? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். மேலும், இவர் டிக் டாக்கில் போட்ட பல வீடியோக்களை பதிவிட்டு விமர்சித்து வருகின்றனர்.
யார் என்ன சொன்னாலும் சண்டை வாங்கி கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே சுற்றி வருகிறார். கடந்தவாரம் கமல் ஹாசன், உங்களிடம் எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல மற்ற போட்டியாளர்கள் தயங்குகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிகிறதா? என்கிற கேள்வி எழுப்பி, யார் எது சொன்னாலும், அதை எப்படி நீங்கள் சொல்லலாம், அதெல்லாம் நீங்க சொல்ல கூடாது என வம்பிழுப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறீர்கள் என வச்சு செய்தார்.
கமல் கேட்ட பிறகாவது தனலட்சுமி திருந்துவார் என பார்த்தால், இன்றைய தினம் சந்திரமுகி ரேஞ்சுக்கு இறங்கி மணிகண்டனிடம் சண்டை போட்டுள்ளார். மேலும் இவரை பற்றி இவருடைய நண்பர்கள் கூறியுள்ள தகவல் தான் பிக்பாஸ் ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தன்னை ஒரு ஏழ்மையான வீட்டு பெண்ணாக காட்டி கொண்ட தனலட்சுமி நிஜத்தில் வசதிபடைத்த பெண் என்றும், அவருடைய அப்பா கூட இல்லை என்று சொன்னதெல்லாம் சுத்த பொய் என கூறி உள்ளார்.
தனலட்சுமியின் தந்தை ஒர்க் ஷாப் வைத்துள்ளார் என்றும், அவருடைய அம்மா துணி கடை நடத்தி வருவதோடு, பைனான்ஸ் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவருடைய தந்தையுடன் தனலட்சுமி ரீலீஸ் செய்து வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் என தனலட்சுமியின் நண்பர்கள் கூறியதை தொடர்ந்து, அவரது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தந்தையுடன் வீடியோ போட்ட ரீல்ஸ் கிடைத்துள்ளது.
ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனலட்சுமி மக்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக பெற்ற தந்தையையே மறைத்தது, ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் என நெட்டிசன்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பிக்பாஸ் தனலட்சுமி இரண்டு படங்களை அவரே தயாரித்தும் நடித்துள்ளாராம். ஆனால் அந்த படங்கள் இது வரை வெளியாகவில்லை.