ஆண்ட்டி, பெரியம்மா என உருவகேலி செய்த அசல்.. கொந்தளித்த தனலட்சுமி.. பரபரப்பான வீடியோ வைரல் !
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஆரம்பித்து முழுதாக 1 வாரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கடந்த சில நாட்களாக அசல் செய்யும் சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது. இந்த நேரத்தில் அடுத்தொரு சம்பவம் நடந்துள்ளது.
பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். ஆண்ட்டி, பெரியம்மா என அவர் கூறியதை கேட்டு கோபம் அடைந்த தனலட்சுமி அசலிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். அதற்கு, அசீம், ஜி.பி.முத்து, விக்ரமன் தலையிட்டு அவர்களுக்குள் அது பிரச்னையாக மாறிவிட்டது. இதன் வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது.
Fight 😳 #GPMuthu #GPMuthuArmy #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/TtayP83NwQ
— GP Muthu Army (@drkuttysiva) October 19, 2022
See #Vikraman just come ask to #Dhanalakshmi what happen and dhana talk to vikram this #Azeem come show a overseen and attitude to vikram! And #GPMuthu also come stopping vikram to talk and #ADK also come join this is name Bigg groups ! #AsalKolar oru poruki🤮 #Biggbosstamil6 pic.twitter.com/GJf8hg6dm8
— Kɪɴɢ (@Mikah_Amyy17) October 20, 2022
#GPmuthu Old generation mindset. #Vikraman is progressive mindset. Hope Vikraman change old mindset of GP.Muthu #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/Xwtlu2DMG2
— TV GO (@TV_GO_) October 19, 2022