"சனியன் எனக்குனே வருது".. வார்த்தையை விட்ட தனலட்சுமி.. எல்லைமீறி வெடித்த சண்டை.. மீண்டும் பற்றிக்கொண்ட Biggboss வீடு!

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் பாடகர் ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி, மைனா நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

21 போட்டியாளர்களில் இப்போது 18 போட்டியாளர் உள்ளார்கள். கானா பாடகர் அசல் கோலார், மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்டோர் ஏவிக்ட் ஆகிவிட்டனர். கடந்த வாரம், கமல் அசீமிடம் அவரது தவறை புரிய வைத்து ஒரு வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார். ஏனெனில், சக போட்டியாளர்களிடம் ஒருமையில் பேசுவது, அடுத்தவர்களை போல் செய்து காமிப்பது, மரியாதை குறைவாக கத்தி பேசுவது என போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் வெறுப்பையும் சம்பாதித்தார்.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

இதன் வீடியோக்கள் இணையத்தில் உலா வந்தன. இந்நிலையில், இந்த வாரம் அசீம் சற்று நிதானமாக நடந்து வருகிறார். ஆனால், போன வாரம், தனலட்சுமியை கமல் சப்போர்ட் செய்து பேசவே எல்லோரும் அவரை நம்பி வருகின்றனர். தனலட்சுமி கொஞ்சம் எல்லா விஷயத்துக்கும் ஓவர் ஆக்ட் செய்து ரசிகர்கள் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். அப்படி தற்போது, தனலட்சுமி பேசிய ஒரு வார்த்தை ப்ரளயமாக வெடித்துள்ளது.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிவி டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக அணியை உருவாக்கிக் கொண்டிருந்தார் மைனா. இதில் ஆயிஷாவிடம் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனலட்சுமியிடம் கதிரவன் கேட்க அப்போது தனலட்சுமி, “எல்லாருக்கும் பிடித்தது போல் நடந்து கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையை ஆயிஷா மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தை நாம் முன்வைக்கலாம்” என்று கூறினார்.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

இதற்கு மைனாவிடம் நேரடியாக அசீம் பதிலளித்தார். அதன்படி, “நான் 4 வருடமாக ஆயிஷாவை பார்க்கிறேன், அவர் அப்போது இருந்தது போல் தான் இப்போதும் இருக்கிறார்” என்று கூறிக் கொண்டிருக்க பாதியில் எழுந்த தனலட்சுமி அசீம் சொல்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூற, இதற்கு அசீமோ, “இப்படிப் பேசும்போது பாதியில் எழுந்து சென்றால் என்ன அர்த்தம்? இது எல்லாருக்கும் போக தெரியும். நானும் போவேன்” என்கிறார்.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

அதற்கு பதிலுக்கு தனலட்சுமியும் பேச இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது. இதில் அசீம், “உன்னை விட சூப்பரா எனக்கும் கோபம் வரும் ” என்கிறார். அதற்கு தனலட்சுமி, “உங்கள் கோபத்தை நான் பார்த்து இருக்கிறேன்.. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.. சனியன் எனக்குனே வாரம் வாரம் வருது” என்று பேசுகிறார்.

dhanalakshmi and azeem fight contestants got tensed video viral

இவர்களின் வாக்குவாதம் பதிலுக்கு பதில் பேச நீண்டுகொண்டே சென்றது. இதனால் சுற்றியிருந்த போட்டியாளர்கள் இருவரையும் அமைதிப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் இருவருமே பேசிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் தனலட்சுமி வெளியே சென்று விட்டார். மற்றவர்கள் பெட்ரூமில் இருந்தனர். பின்னர் தனலட்சுமி வெளியே சென்று அழுதுவிட்டார். இப்படி பிக்பாஸ் வீட்டில் மீண்டும் அசீம் - தனா இடையிலான சண்டை முளைத்திருக்கிறது. இறுதியாக அசீம் இருக்கும் அணியில், தான் இருக்க முடியாது என்று தனலட்சுமி கூறிவிட்டார். இவர்களின் சண்டை எங்கே சென்று முடியும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share this post