நடிகை தீபிகா படுகோனேவிற்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி.. படப்பிடிப்பின் போது பதறிப்போன படக்குழு

Deepika padukone mild heart pain admitted in hospital

ஐஸ்வர்யா என்னும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோனே. இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் என்னும் படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்தார்.

Deepika padukone mild heart pain admitted in hospital

அதன் பின்னர், பல பிளாக்பஸ்டர் ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் கோச்சடையான் திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய மொழி திரைப்படத்திலும் நடித்தார்.

Deepika padukone mild heart pain admitted in hospital

ஹாலிவுட் மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தீபிகா படுகோன். உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குரியவர்.

Deepika padukone mild heart pain admitted in hospital

இதனிடையே, 2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சமீபத்தில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.

Deepika padukone mild heart pain admitted in hospital

இவர் தற்போது நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

Deepika padukone mild heart pain admitted in hospital

இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு நடிகை தீபிகா படுகோனே காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த பின் நலமாக உள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை தீபிகா படுகோனே அங்குள்ள நோவேட்டல் ஓட்டலில் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வெடுத்து வருகிறாராம்.

நடிகை தீபிகா படுகோனேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர்.

Share this post