மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே.. பதற்றத்தில் படக்குழு !
ஐஸ்வர்யா என்னும் கன்னட மொழி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை தீபிகா படுகோனே. இதனைத் தொடர்ந்து, பாலிவுட்டில் ஓம் சாந்தி ஓம் என்னும் படம் மூலம் பாலிவுட் என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின்னர், பல பிளாக்பஸ்டர் ஹிட் பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா, சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் கோச்சடையான் திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய மொழி திரைப்படத்திலும் நடித்தார்.
ஹாலிவுட் மற்றும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் அடைந்தவர் தீபிகா படுகோன். உலக சாதனையாளர் விருதை வென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமைக்குரியவர்.
இதனிடையே, 2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் சமீபத்தில் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தனர்.
இவர் தற்போது நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த போது நடிகை தீபிகா படுகோனேவுக்கு லேசான உடல் நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர், குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார். தற்போது, மீண்டும், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபிகாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பலகட்ட பரிசோதனையின் காரணமாக அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் தீபிகா மன அழுத்தத்தின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நலமுடன் இருப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது இவர் ஷாருக்கான் உடன் பதான் படத்தில் நடித்த வருகிறார். கிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர், பிரபாஸ் மற்றும் அமிதாபச்சன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே, அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவி போன்ற பல பிரபல படங்களில் நடித்து வருகிறார்.