'மனசுல நிறைய கவலை.. கேட்க யாருமே இல்ல..' வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட பிரபல தமிழ் பட நடிகை !
சினிமா திரையுலகில் நடிகர் -நடிகைகள் தற்கொலை அவவ்போது அதிர்ச்சியை உருவாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையில் வசித்து வரும் பிரபல தமிழ் பட நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 27ம் தேதி திரைக்கு வந்த வாய்தா படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை தீபா என்னும் பவுலின ஜெசிகா. மகிவர்மன் இயக்கத்தில் ராமசாமி, நாசர், புகழ் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
29 வயது வயதே ஆகும் இவர், விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் நடித்துள்ளார். காதல் தோல்வியால் இவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் மல்லிகை அவன்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். முன்னதாக பல சினிமாக்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு வாய்தா படத்தில் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது.
நேற்று அவரது உறவினர்கள் பலமுறை தொலைபேசிகள் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் தீபா அவர்களின் அழைப்பை எடுக்கவில்லை. இதை அடுத்து அவரது நண்பரான பிரபாகரன் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்த போது தீபா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
பின்னர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த தீபாவின் சகோதரர் தினேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதோடு, சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீபாவின் உடலை மீட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் ஆனால் காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தமிழ் திரையுலகில் நல்ல நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா காதலுக்காக தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ பற்றி தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. மனசுல நிறைய கவலை இருக்கு. யாரிடமாவது மனசு விட்டு பேசணும்னு தோனுது. ஆனால் கேட்குறதுக்கு தான் யாருமே இல்லை என்கிற பட வசனத்தை பேசியிருந்தார் தீபா. அவர் தன் வாழ்க்கையில் நடந்ததை சொல்லத் தான் அப்படி ஒரு வசனத்தை தேடிக் கண்டுபிடித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அது புரியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.