ஷூட்டிங்கின் போது கடல் அலையில் சிக்கிய டிடி அக்கா பிரியதர்ஷினி.. வைரலாகும் வீடியோ !

Dd sister vj priyadharshini shooting video viral

ஒரு தொகுப்பாளினிக்கு ஹீரோயின் ரேஞ்சுக்கு வரவேற்பும் பிரபலமும் கிடைக்கிறது என்றால் அது நம்ம DDக்கு தான். விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த இவர், சில திரைப்படங்களிலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால், விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் இவரது புகழ் பெற்றவை. இவருக்கு நிறைய ஹீரோயின் திரைப்பட வாய்ப்புகள் வந்தும் கூட அதை ஏற்காமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி காண்பது என இருந்து வருகிறார்.

Dd sister vj priyadharshini shooting video viral

இவரது அக்கா பிரியதர்ஷினியும் ஒரு காலத்தில் முன்னணி தொகுப்பாளராக இருந்தவர். பிரியதர்ஷினி நடத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். குச்சிப்புடி, கதகளி என மற்ற பல விதமான நடன கலை கற்றுத் தேர்ந்தவர்.

இந்நிலையில், தற்போது பிரியதர்ஷினி கடற்கரையில் இருக்கும் பாறை மீது நடனம் ஆடி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும் போது, பெரிய அலை வந்து அவரை தள்ளி விட, நிலைதடுமாறி கடலில் தத்தளிக்கும் வீடியோவை, ‘ஷூட்டிங் பரிதாபங்கள்’ என சொல்லி அவரேஅந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

Share this post