ராஷ்மிகாவை இப்டி டேமேஜ் செய்த டேவிட் வார்னர்.. வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்..

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோஷூட் மற்றும் வீடியோ எடுத்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார். நடிகர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

தற்போது, வாரிசு, புஷ்பா 2 போன்ற பிரபல ஹீரோ திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட்டையும் தாண்டி நடிப்பு, டிக் டாக், ரீல்ஸ் என ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும், நடனம் ஆடுவது, பஞ்ச் டயலாக் பேசுவது போன்றவற்றை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

இதனால் சமூக வலைதளத்தில் வார்னருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது, அந்த வகையில் முகத்தை எடிட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். ராஷ்மிகா ஆடியுள்ள பாடலை ராஷ்மிகாவின் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை எடிட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

david warner imitates rashmika and face edit on songs video getting viral on social media

அந்த வீடியோவால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அந்த வீடியோவின் கீழ் கமெண்டில் ரஷ்மிகாவை டேக் செய்து “சாரி” என ஜாலியாகவும் வார்னர் குறிப்பிட்டிருக்கிறார்.

Share this post