டி.இமான் 2வது திருமணம்.. பொண்ணு இவங்க தான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

D imman second marriage in simple way photos getting viral

தமிழ் திரையுலகில் தமிழன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான். இதனைத் தொடர்ந்து, விசில் படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பிரபலமாக அறியப்பட்டவர்.

பின்னர், ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள இமான், திருவிளையாடல் ஆரம்பம், கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களின் பாடலுக்காக பல விருதுகளை வென்றார்.

விஸ்வாசம், சீமராஜா, கடைக்குட்டி சிங்கம், டிக் டிக் டிக், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் போன்ற பிரபல வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

D imman second marriage in simple way photos getting viral

இவரது குரலுக்கும் இசைக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஸ்வாசம் பட இசையமைப்பிற்காக கலைமாமணி விருதை வென்றார்.

இவரது மனைவி மோனிகா அவர்களை பிரிவதாக தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார். நவம்பர் 2020ம் ஆண்டு முதல் பிரிந்து வாழும் இவர்கள், டிசம்பர் 2021ம் ஆண்டு சுமூகமாக பிரிந்தனர். இவர்களுக்கு 2 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், இமான் 2வது திருமணம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. தற்போது, திருமண வரவேற்பு குறித்து புகைப்படம் ஒன்று வெளியாக வைரல் ஆகி வருகிறது.

அவர் யார் என்ன என்ற விவரம் ஏதும் வராத நிலையில், எளிதாக திருமணம் முடிந்துள்ளதை காட்டும் வகையில் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

D imman second marriage in simple way photos getting viral

Share this post